ட்வின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷனுடன் இணைந்து சேவாவின் இலவச மருத்துவ முகாம்

Advertisement

அமெரிக்கா, மின்னடோங்கா பகுதியில் சேவா மற்றும் ட்வின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

அமெரிக்கா, மின்னடோங்கா பகுதியில் உள்ள மின்னடோங்கா கம்யூனிட்டி சென்டரில் நேற்று (22.04.2018) மருத்துவ முகாம் நடைபெற்றது. சேவா மையத்துடன் ட்வின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் இணைந்து இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்டவைக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்துக் கொண்டனர்.

முன்னதாக, ட்வின் சிட்டீஸ் தமிழ் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் திரு. அஜித் கலாவதி, திரு.ஷ்வான் புஞ்வாணி, ஸ்ருதி ராங்க்நேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவர்களை தொடர்ந்து, அஞ்சலி மிஸ்ரா நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஊட்டச்சத்து, புற்றுநோய், நீரிழிவுநோய் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், இதில் விசா சுகாதார மருத்துவ பரிசோதனை குறித்தும் விளக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, நீரிழிவு பரிசோதனை, ரத்த அழுத்தம், கொழுப்பு உள்ளிட்டவைக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதுபோல், மாமோகிரோம் ஸ்கிரீனிங், இசிஜி, இதயம் உள்ளிட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. இதில், இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு பரிசோதனை செய்துக் கொண்டனர்.

 - thesubeditor.com

Advertisement
/body>