அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் சிக்கல்: குடியுரிமை மறுக்கப்படும் இந்தியர்கள்!

Advertisement

பிரிட்டனில் ஐரோப்பியர்கள் அல்லாத மக்களுக்கு நிரந்திர குடியுரிமை பெறும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டவர் நிரந்திர குடியுரிமையைப் பெறுவதற்கான வழிகளுள் ஒன்றுதான் 'ஈபி2' மற்றும் 'ஈபி3' விண்ணப்ப முறைகள். இதன் அடிப்படையில் ஒரு துறையில் ஆகச்சிறந்து விளங்கக்கூடிய ஒருவருக்கு அத்துறையிலேயே அமெரிக்காவிலேயே நீடிப்பதற்கு 'ஈபி2' விண்ணப்பம் மூலமும் ஒரு துறையில் சிறந்த திறமை உடையவர் அதே நிலையில் அமெரிக்காவின் நிரந்திர குடியுரிமையைப் பெற 'ஈபி3' விண்ணப்பம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி உள்ளது.

இதேபொல் பிரிட்டனிலும் ஒரு துறையில் ஆகச்சிறந்து விளங்கக்கூடிய ஒருவருக்கு அத்துறையிலேயே பிரிட்டனிலேயே பணியாற்ற நிரந்திர குடியுரிமை வழங்கப்படும். இந்தத் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2010-ம் ஆண்டுக்கு முன்னர் குடிவந்தோருக்கும் தற்போது நிரந்திர குடியுரிமைக்கான விண்ணப்பப் படிவம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா நடைமுறைகள் அமெரிக்கவாழ் இந்தியர்களை பதம் பார்ப்பதுபோல் பிரிட்டன்வாழ் இந்தியர்களின் டையர் 1 விசா சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து பிரிட்டனில் வாழும் உயர் பதவியில் உள்ள இந்தியர்கள் லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

Advertisement
/body>