அமெரிக்கவாழ் இந்தியரால் ஒரு கல்வி நிறுவனமே உருவாகியுள்ளது: பெருமிதத்தில் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகம்

அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவர் அளித்த நன்கொடையால் அமெரிக்காவின் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகம் தனியொரு கல்வி நிறுவனத்தையே உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவில் வாழும் இந்தியத் தம்பதியினர் ராஜ் குப்தா மற்றும் கமலா குப்தா தம்பதியினர். இத்தம்பதியினர் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகத்துக்காக சுமார் 5 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.

இதன் மூலம் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகம் தனியாக ஒரு மேலாண்மை கல்வி நிறுவனத்தையே உருவாக்கியுள்ளது. குப்தாஸ் மேலாண்மை கல்வி நிறுவனம் அக்குடும்பத்தின் பெயராலேயே இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிற்வனத்தில் சர்வதேச தரத்தில் மேலாண்மைக் கல்வி வழங்கப்பட உள்ளது. உலகின் சிறந்த கல்வியாளர்கள் கார்ப்பரேட் மேலாண்மை, அரசு சாரா நிறுவன மேலாண்மை போன்ற பிரிவுகளுக்கு வகுப்புகள் எடுக்க உள்ளனர்.

இதுகுறித்து ட்ரெக்ஸல் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜான் ஃப்ரை கூறுகையில், “ட்ரெக்ஸல் பல்கலை-யின் முன்னாள் மாணவரான குப்தா மற்றுய்ம் அவரது குடும்பத்தார் அளித்துள்ள இந்த நன்கொடையால் புதியதொரு கல்வி நிறுவனமே தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர் ஒருவரால் இன்று கிடைக்கும் பலன் மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

 - thesubeditor.com

Advertisement