ஹெ1பி விசா கெடுபிடி: ஈபி5 விசாவுக்கு கிராக்கி!

Advertisement

ஹெச்1பி விசா நடைமுறைகள் கடினமாகி உள்ளதால் புதிதாக் ஈபி5 விசா முறைக்கான தேவை அதிகரித்துள்ளது.

ஹெச்1பி விசா நிர்வாக நடைமுறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றங்கள் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கும் விதிமுறைகளால் இந்தியர்களுக்கே அதிக சிக்கல்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஹெச்1பி விசா மூலம் ஐடி ஊழியர்களே அதிகளவில் அமெரிக்கா செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றப் பின்னர் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான சூழல் இறுக்கமாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஐடி நிறுவனங்கள் சில தற்போது 'ஈபி2' மற்றும் 'ஈபி3' முறைகளின் கீழே க்ரீன் கார்டு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ‘ஈபி5’ விசாவுக்கு தற்போது தான் தேவை அதிகரித்துள்ளது. இதனால், அமெரிக்காவில் நிரந்திரமாக குடியிருக்க இந்த ஈபி5 விசா முறை பிரபலமாகி வருகிறது.

ஈபி5 விசா மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெற முடியாது என்றாலும் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணியாற்றுவோர் தங்கள் குடும்பத்துடன் வசிக்க இந்த விசா முறையின் தேவை உள்ளது என்பதால், இதற்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதர விசா முறைகள் போல் இல்லாமல், இந்த விசா பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை விசாவுக்காக முதலீடு செய்தல் அவசியம். அதனாலே ‘ஈபி5’ விசாவுக்கு ’காசுக்கு விசா’ என்ற அடைமொழிப்பெயரும் உள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

 - thesubeditor.com

Advertisement
/body>