ஹெச்-1பி விசா-குறையும் விண்ணப்பங்கள்...ஓர் புள்ளிவிவரப் பார்வை!

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை எழுதிய கடிதத்தில் 2016 மற்றும் 2017 நிதியாண்டில் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விவரத்தை குறிப்பிட்டுள்ளது.
ஹெச்-1 பி விசாவுக்கு முதல்முறையாக விண்ணப்பிப்போர் மற்றும் நீட்டிப்பு கோரி விண்ணப்பிப்போர் ஆகிய பிரிவுகள் உள்ளன.
2016 நிதியாண்டில் கொடுக்கப்பட்ட ஹெச்-1 பி விசாக்களில் 74.2 சதவீதத்தினரும் 2017 நிதியாண்டில் 75.6 சதவீதத்தினரும் இந்திய தொழில்நுட்ப பணியாளர்களாவர். 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017-ம் ஆண்டில் முதன்முறையாக ஹெச்-1 பி கோரி விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 4.1 சதவீதம் குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டில் முதன்முறை மற்றும் நீட்டிப்பு பெற்றோர் என்று 2,56,226 இந்தியர் ஹெச்-1பி விசா பெற்றிருந்தனர். அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,76,423 ஆக உயர்ந்திருந்தது.
அதாவது, 2016-ம் ஆண்டில் முதன்முறையாக ஹெச்-1 பி விசா பெற்றோர் எண்ணிக்கை 70,737. 2017-ம் ஆண்டில் அது 67,815 ஆக குறைந்து விட்டது. அதேவேளையில் 2016-ம் ஆண்டு 1,85,489 இந்தியர் நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், 2017-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்து 2,08,608 இந்தியர் நீட்டிப்பு கோரி பெற்றுள்ளனர். 
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக ஹெச்-1 பி விசா வைத்துள்ள வெளிநாட்டவர் சீனர்கள். 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஹெச்-1 பி விசாக்களை பெற்றவர்களுள் 9.3 சதவீதத்தினர் சீனர்கள். 2017-ம் ஆண்டில் இது 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
 
Advertisement