26 அமெரிக்கவாழ் இந்திய மாணவர்களுக்கு உயரிய கவுரவம்!

அமெரிக்க ஜனாதிபதியின் கீழ் நாட்டில் சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘அதிபர் உதவித்தொகை’ திட்டத்துக்கு 26 அமெரிக்கவாழ் இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களில் அசாத்திய திறமையோடும் ஆர்வத்தோடும் உள்ள மாணவர்களுக்கும் ‘அதிபர் உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் கவுரவிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் அதேபோல், நாடு முழுவதிலும் இருந்து 161 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் அமெரிக்கவாழ் இந்திய மாணவர்கள் ஆகும். அதிலும் குறிப்பாக 26 மாணவர்களில், 14 பேர் மாணவிகள் என்பது கூடுதல் தகவல்.

அமெரிக்காவின் பள்ளி கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய கவுரவம் இவ்விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் உயர்நிலைப் பள்ளி கல்வியை சுமார் 3.6 மில்லியன் மாணவ- மாணவியர் நிறைவு செய்கின்றனர்.

இவர்களில் 5,200 பேர் விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக உள்ளனர். இந்தப் பட்டியலில் இருந்துதான் தற்போது 161 மாணவ- மாணவிகள் இந்த உயரிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement