மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்: முதல்கட்ட லீக் போட்டியின் முழு விவரம் #MTBC

May 12, 2018, 00:21 AM IST

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் முதற்கட்ட லீக் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்றன.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போட்டி மே மாதம் முதல் வாரம் தொடங்கியதை அடுத்து, ஆகஸ்டு மாதம் கடைசி வாரம் வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதற்கான முதல் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெற்றது. மொத்தமுள்ள 54 அணிகளுக்கிடையே 27 போட்டிகள் நடைபெற்றன.

இதோ போட்டிகளின் முழு விவரம்:

தி வாரியர்ஸ் மற்றும் விக்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 79 ரன்கள் எடுத்து விக்டர்ஸ் அணி வெற்றிபபெற்றது. இதேபோல், ஹிட் அண்டு ரன் மற்றும் நெருப்பு அணிகளுக்கு இடையான போட்டியில் 89 ரன்கள் எடுத்து நெருப்பு அணி வெற்றிப்பெற்றது.

மிட்வெஸ்ட் கிரிக்கெட் கிளப் மற்றும் ஜாகுவார்ஸ் 4 கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜாகுவார் அணி வெற்றிப்பெற்றது.
பிளாக் பான்தர்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டைடன்ஸ் அணி வென்றது.

இந்தியன் நைட்ஸ் மற்றும் எம்என் லையன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியன் நைட்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

எபிக் மற்றும் எம்ன் மாவெரிக்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எம்என் மாவெரிக்ஸ் வென்றது.

ப்யூ குட் மென் மற்றும் குஜூ அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் குஜூ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தியன் பாய்ஸ் மற்றும் ட்வின் சிட்டீஸ் ட்விஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியன் பாய்ஸ் வெற்றிப்பெற்றது.

மைட்டி மின்ஸ் மற்றும் ஸ்பார்டன்ஸ் இலவன் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் மைட்டி மின்ஸ் வெற்றிப்பெற்றது.

சாரியட்ஸ் ஆப் பையர் மற்றும் சாலிட்டயர் ஓக்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாலிட்டயர் ஓக்ஸ் வென்றது.

வி ராக் மற்றும் ஷோர்வியூவ் லையன்ஸ் போட்டிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வி ராக் வென்றது.

டவுன்டவுன் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ப்ளூபால்கான்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் டவுன்டவுன் ஸ்டிரைக்கர்ஸ வென்றது.

ஹவிட்சர்ஸ் மற்றும் இபி டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹவிட்சர்ஸ் வென்றது.

வி3 பாய்ஸ் டக்கால்டீஸ் மற்றும் 11 டல்கர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வி3 டக்கால்டீஸ் வென்றது.

சாம்பியன்ஸ் யுனைட்டட் மற்றும் பைலாக் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பைலாக் அணி வெற்றிப் பெற்றது.

புல்ஸ் மற்றும் இந்தியன் கால்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியன் கால்ட்ஸ் வெற்றிப்பெற்றது.

என்சிஐஎம் மற்றும் ஈகன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் என்சிஐஎம் வென்றது.

ஏசஸ் மற்றும் ஸ்மாஷர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்மாஷர்ஸ் அணி வென்றது.

ரைசிங் வாரியர்ஸ் மற்றும் ஈகன் பான்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் வாரியர்ஸ் அணி வென்றது.

ரெட் லையன்ஸ் மற்றும் ஜி&ஙீமி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ரென் லையன்ஸ் வென்றது.

என்என் சூப்பர்கிங்க்ஸ் மற்றும் அவென்ஜர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சமமாக வென்றது.

இந்தஸ் நைட்ஸ் மற்றும் மின்னசோட்டா இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மின்னசோட்டா இந்தியன்ஸ் வென்றது.

மின்னசோட்டா ராயல் சேலன்ஜர்ஸ் மற்றும் பின்ச் ஹிட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பின்ஸ் ஹிட்டர்ஸ் அணி வென்றது.

குமின்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் மின்னபோலிஸ் ராக்கர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் குமின்ஸ் கிரிக்கெட் கிளப் அணி வென்றது.

ப்ளூஹாக்ஸ் மற்றும் வுட்பரி வால்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ப்ளூஹாக்ஸ் அணி வென்றது.

டேர் டெவில்ஸ் மற்றும் ராயல் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் டேர் டெவில்ஸ் அணி வென்றது.

தேசி பன்திட்ஸ் மற்றும் பிக் வேவ் க்ரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தேசி பன்திட்ஸ் வெற்றிப் பெற்றனர்.

ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல்:

இந்த 27 போட்டிகளில் எம்என் மாவெரிக்ஸ் அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி பேட்டிங்கில் 175 மற்றும் பவுலிங்கில் 190 என மொத்தம் 415 ரன்களை குவித்து முதல் இடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, குமின்ஸ கிரிக்கெட் கிளப் அணியை சேர்ந்த முரளி ரவீந்திரன் மொத்தம் 290 ரன்களும், இந்தியன் நைட்ஸ் அணியை சேர்ந்த ஆதித்யா பைல்லா 282 ரன்களும், டேர் டெவில்ஸ் அணியை சேர்ந்த சுமித் மஹாகுத் 281 ரன்கள் பெற்று அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.

இதேபோன்று இரண்டாம் கட்டமாக நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் லீக் போட்டியல் 54 அணிகளும் மீண்டும் களமிறங்க உள்ளனர். இதிலும், 27 போட்டிகள் நடைபெறுகின்றன. லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடத்தில் உள்ள அணிகள் அடுத்தகட்ட ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்: முதல்கட்ட லீக் போட்டியின் முழு விவரம் #MTBC Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை