இறுதி கட்டத்தில் ஹெச்-4 ஈஏடி விசா ரத்து நடவடிக்கை

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று பணிபுரிபவர்களின் ஹெச்-4 விசா பெற்ற கணவர் அல்லது மனைவி வேலை செய்ய ஒபாமா அரசு வழங்கிய அனுமதியை ட்ரம்ப் அரசு ரத்து செய்ய உள்ளது. 
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. அவர்தம் வாழ்க்கை துணைக்கு ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. ஹெச்-4 விசா உள்ளவர்கள், அமெரிக்காவில் வேலை செய்யலாம் அல்லது தொழில் தொடங்கலாம் என்ற அனுமதியை 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா வழங்கினார். 
 
தற்போதைய அதிபர் ட்ரம்ப், 'அமெரிக்க பொருள்களை வாங்கு; அமெரிக்கர்களை வேலையில் அமர்த்து'  என்ற கொள்கையை அறிவித்துள்ளார். அதற்கேற்ப அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் துறை விசா நடைமுறைகளை கடுமைப்படுத்தியுள்ளது. மேலும், ஹெச்-4 விசாதாரர்கள் வேலை செய்வதற்கான அனுமதியை ரத்து செய்யும் புதிய விதியை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியை கைவிட வேண்டி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
வேலை செய்யும் அனுமதி கொண்ட ஹெச்-4 விசா பெற்றுள்ளவர்களில் 93 விழுக்காட்டினர் இந்தியர். ட்ரம்பின் இந்த விதி நடைமுறைக்கு வந்தால் ஏறத்தாழ 70,000  பேர் பாதிக்கப்படுவர்.
இது குறித்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்த தகவலின்படி, ஹெச்-4 விசா ரத்துக்கான விதி உருவாக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது தெரிய வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு துறை அனுமதிக்கு பின்னர், நிர்வாக ரீதியான ஆணை பிறப்பிக்கப்படுவதற்காக நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை அலுவலகத்திற்கு இவ்விதி அனுப்பப்படும் என்றும் தெரிகிறது. ஹெச்-4 விசாதாரர் வேலை செய்யும் உரிமையை பறிக்கும் இவ்விதி வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
welsh-river-runs-white-after-milk-tanker-overturns
பால் ஆறாக மாறிய டுலைஸ் ஏரி
new-zealand-suspends-entry-of-travellers-from-india-amid-covid
இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தடை
exit-the-us-force-iraq-joins-hands-with-iran-trump-on-the-sidelines
அமெரிக்க படையே வெளியேறு! ஈரானோடு கைகோர்த்த ஈராக்-விழிபிதுங்கி நிற்கும் டிரம்ப்.
Tamil-Sangam-Arranged-Pongal-festival-in-America
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கத்தின் மாபெரும் தைப் பொங்கல் திருவிழா
The-first-Indian-to-head-International-Advertising-Association
பன்னாட்டு விளம்பர கூட்டமைப்பின் (IAA) தலைவரான முதல் இந்தியர்
9000-Indians-arrested-in-America
அமெரிக்காவில் 9000 இந்தியர்கள் அதிரடி கைது
New-deportation-rule-in-US-starting-next-week-may-hit-Indians
இந்தியர்களின் அமெரிக்க கனவு முடிவுக்கு வருகிறதா ?
Thanthai-Periyar-140th-birthday-celebration-in-California
கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
US-Green-Card-New-Rule-Be-Effective-on-Indians
அமெரிக்க கிரீன் கார்டு: இந்தியர்களை பாதிக்கும் புதிய விதி நடைமுறைக்கு வருமா?
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
PERIYAR 140th BIRTHDAY CELEBRATION IN BAY AREA
Tag Clouds