வளைகுடா தமிழர் குழு சார்பில் ஆரோக்கியம், ஊட்டச்சத்து கருத்தரங்கம்!

அமெரிக்காவில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து கருத்தரங்கம்!

Jun 22, 2018, 22:33 PM IST

வளைகுடா தமிழர் சார்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கம் ஜூன் 23-ஆம் தேதி கலிப்போர்னியாவில் நடைபெறவுள்ளது.

Rice

வாழ்க்கை ஓடும் வேகத்திற்கு நாமும் ஈடுக் கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக, உடலில் பல மாற்றங்கள் நமக்கே தெரியாமல் மாறிக் கொண்டிருக்கின்றன.

நம் முன்னோர்களிடம் இருந்த உணவு முறைக்கும், இந்த நவீன காலத்து உணவு முறைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. காற்றடைத்த பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுகள், பிட்சா, பர்கர் என நமது உடலுக்கு ஏற்காத உணவுகளைத்தான் ஆசைத்தீர உண்டு வருகிறோம்.

ஆனால் ஒரு கட்டத்தில், இவை எல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று தெரிந்த பிறகு, மீண்டும் நம் முன்னோர்கள் காலத்திற்கே திரும்ப முயன்று வருகிறோம்.

இந்த மாடர்ன் உலகில் நம்மால் முன்னோர் காலத்திற்கு உடனே மாற முடியுமா? அன்றாட சாப்பிடும் உணவு வகைகளிலே எது நல்லது, எது தீங்கு விளைவிப்பது? என இந்த கால தலைமுறைகளுக்குள் பல கேள்விகள் சூழ்ந்துள்ளன.

இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துக் கொள்வதற்காகவே வளைகுடா தமிழர் சார்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

இக்கருத்தரங்கம் வரும் 23-ஆம் தேதி மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் Pacific Green Funding, Kohoutek Way 29300, Union City, California 94587 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

Bay Area Tamils

இந்த கருத்தரங்கில் பங்கு பெற வளைகுடா தமிழர் சார்பில் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இங்கு வரும் மக்கள் ‘உடல் ஆரோக்கியம் சார்ந்து எழும் கேள்விகளுடன் வரலாம்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் வல்லுநர்கள் இல்லை என்றாலும் மக்கள் மனதில் உள்ள கேள்விகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படும். இதை தவிர வளைகுடா தமிழர் சார்பில், ‘வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசி சிறந்ததா?’

தரையில் அமர்ந்து சாப்பிடும் முறை உடலுக்கு நல்லதா? ஆம் என்றால் அவை இக்காலத்து நவீன வீடுகளில் எப்படி அமல்படுத்தப்படலாம்? ஆன்மீக விரதங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா மைக்ரோவேவ் ஓவன் சமையல் தீங்கு விளைவிக்குமா? நெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யின் நன்மைகள் என்ன? வெள்ளை சாதத்தை விட கோதுமை சிறந்ததா? சோயா உடலுக்கு கெட்டதா?இதுபோன்ற கேள்விகள் குறித்து ஆலோசனைகள் நடத்த தயாராக உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவோம்! ஆரோக்கியம் காப்போம்!!

You'r reading வளைகுடா தமிழர் குழு சார்பில் ஆரோக்கியம், ஊட்டச்சத்து கருத்தரங்கம்! Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை