விஞ்ஞானிகளுக்கு புதிய விசா - பிரிட்டன் அறிமுகம்

by SAM ASIR, Jul 9, 2018, 20:01 PM IST
இந்தியா உட்பட வெளிநாடுகளின் அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் ஆராய்ச்சி துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்புதிய திட்டம் ஐக்கிய ராஜ்ஜிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு - UKRI என்ற துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்துறை மட்டுமன்றி இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் போன்ற  அங்கீகாரம் பெற்ற 12 அமைப்புகள், சிறப்பு தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற உயர்திறன் பெற்ற தனி நபர்கள் பணிபுரியவும் பயிற்சி எடுக்கவும் நேரடியாக ஆதரவு (ஸ்பான்சர்) அளிக்க முடியும்.
 
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) வெளியே உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு இரண்டு ஆண்டு பிரிட்டன் விசா வழங்கும் இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பிரிவு 5 (Tier 5) என்ற அரசு அங்கீகாரம் பெற்ற பரிமாற்றம் என்ற வகையுடன் கூடுதலாக சேர்க்கப்படும்.
 
தேசிய சுகாதார சேவையில் (NHS) பணிபுரிய அதிக எண்ணிக்கையிலான இந்திய மருத்துவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வண்ணம் பிரிவு 2 (Tier 2) வகை அதிக பட்ச எண்ணிக்கையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் தாதியருக்கு விலக்கு, பட்டதாரி தொழில்முனைவோர் என்ற பிரிவு 1 (Tier 1) வகைக்கு மாற்றாக தொழில்முனைவோருக்காக புதிய திட்டம் அறிமுகம் என்ற விசா திருத்தங்களையும் சமீபத்தில் பிரிட்டன் செய்துள்ளது.
 
"பிரிட்டன் ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்புகளிலும் உலக அளவில் முன்னணியில் உள்ளது. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இங்கு பயிற்சி பெறவும் பணியாற்றவும் எளிதாக வாய்ப்பு பெற இம்மாற்றம் வழிசெய்யும்," என்று பிரிட்டன் குடிபுகல் அமைச்சர் கரோலின் நோக்ஸ் தெரிவித்துள்ளார்.

You'r reading விஞ்ஞானிகளுக்கு புதிய விசா - பிரிட்டன் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Velinaduval inthiyargal News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை