வாஷிங் மெஷின் போல குலுங்கிய ஏர்ஏசியா விமானம்!

Advertisement

ஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து ஏர்ஏசியாவின் ஏர்பஸ் -330 ரக விமானம், கோலாலம்பூர் நோக்கி பறந்துக் கொண்டிருந்தது. 90 நிமிடங்கள்தான் பறந்திருக்கும் விமானம் திடீரென்று குலுங்கத் தொடங்கியது. சுமார் 90 விநாடிகள் விமானம் குலுங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.

ஏர் ஏசியா விமானம்

பைலட்டுகள் விமானத்தில் தொழில்நுட்பரீதியாக பிரச்னைகள் இருப்பதை அறிந்து உடனடியாக விமானத்தை மீண்டும் பெர்த் நகருக்கேத் திருப்ப அனுமதி கேட்டார். அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பெர்த் விமான நிலையத்தில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. ஆனால் எந்த அசம்பாவிதமும் நிகழாமல் விமானம் பத்திரமாகத் தரை இறங்கியது.

விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 'வாஷிங்மெஷின் குலுங்குவது போல விமானம் குலுங்கியது' என பயணிகள் திகில் விலகமால்க் கூறினர். இதற்கு முன், சிட்னியில் இருந்து ஷாங்காய் சென்று கொண்டிருந்த ஏர்பஸ் விமானமும் இதேப் போன்ற பிரச்னையால் மீண்டும் சிட்னி நகருக்கேத் திரும்பியது.

Advertisement
/body>