இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ரயில் போக்குவரத்தை நீட்டித்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியாவின் முனாயயோவில் இருந்து பாகிஸ்தான் கோக்ராருக்கு இடையே ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.
காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்தியா&பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியா&பாகிஸ்தான் இடையே தொடர்ந்து ரயில் போக்குவரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், இந்தியா&பாகிஸ்தான் இடையே ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தென் பகுதியும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் இடையே ரயில் இயக்கப்படுகிறது. இரு நாட்டு மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2006ம் ஆண்டில் இந்தியா&பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இங்கு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. தற்போது, ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து மேலும் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டுகளுக்கு இடையேயான ரயில் சேவை வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.