தொழில் நுட்பகோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று ஓடுபாதையில் தீப்பிடித்தது. இதில் 41 பேர் தீயில் கருகி உயிரிழந்தாலும், 37 பேரை துணிச்சலாக போராடி உயிருடன் மீளச் செய்த விமானியின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 73 பயணிகள், 5 சிப்பந்திகளுடன் முர்மான்ஸ்க் என்ற நகருக்கு எஸ்யு 1492 ரக சூப்பர் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மின்னல் தாக்குதலில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு தொலைத் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் விமானத்தை அவசரமாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரையறக்கினர்.
விமானம் ஓடுபாதையில் இறங்கும் போதோ நிலைகுலைந்து குலுங்கியதில் திடீரென முன் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீப்பிடித், படியே விமானம் ஓடுபாதையில் ஓட, சுதாரித்த விமானியும் சிப்பந்திகளும் அவசர அவசரமாக விமானத்தை நிறுத்தி எமர்ஜென்சி கதவுகளை திறந்துவிட்டு பயணிகளை வெளியேற்றினர். ஆனாலும் 37 பயணிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. 41 பயணிகள் புகை மூட்டத்தில் மூச்சுத் திணறியும், தீயில் கருகியும் இறந்து விட்டனர்.
மேலும் பயணிகள் யாரும் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, கடைசியாக விமானத்திலிருந்து குதித்துள்ளார் விமான பைலட் . எரியும் நெருப்பிலும், தன் உயிரை பணயம் வைத்து, பிற பயணிகளை காப்பாற்றிய விமான பைலட்டின் கடமையுணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.