ஆங்கிலத்துக்கு அனுமதியே இல்லை: வடகொரியர்களை வரவேற்கத் தயாரான தென்கொரியர்கள்

by Rahini A, Feb 10, 2018, 18:44 PM IST

தென்கொரியாவில் வடகொரியர்களை வரவேற்கும் விதமாக ஆங்கிலத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில்  குளிர்கால ஒலிம்பிக்த் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகளின் அண்டை நாடான வடகொரியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் வடகொரியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் என வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார்.

இதையடுத்து தென்கொரியாவுக்கு வந்த வடகொரியர்களை மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தென்கொரியாவில் உள்ள ஒரு ஃபோர் ஸ்டார் ஹோட்டல் நிர்வாகத்துக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதையொட்டி வடகொரியர்கள் 280 பேருக்கு விருந்தோம்பல் செய்ய 150 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட முதல் விதிமுறையே ‘ஆங்கிலம் தவிர்க்கப்பட வேண்டும்’ என்பதுதான்.

 

 

You'r reading ஆங்கிலத்துக்கு அனுமதியே இல்லை: வடகொரியர்களை வரவேற்கத் தயாரான தென்கொரியர்கள் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை