அமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கிய போலீஸ் அதிகாரி மர்ம நபரால் சுட்டுக் கொலை..

Americas first Sikh police officer fatally shot dead in houston

by எஸ். எம். கணபதி, Sep 28, 2019, 13:33 PM IST

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால், ஹாரிஸ் கவுன்டி காவல் துறையில் துணை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 40 வயதுடைய சந்தீப்சிங் நேற்று ஹுஸ்டன் நகரில் ஒரு போக்குவரத்து சிக்னலில் பணியில் இருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தினார். அந்த காருக்குள் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர்.

காரை நிறுத்தியதும் காரில் இறங்கிய அந்த மர்ம நபர் திடீரென சந்தீப்சிங்கை சரமாரியாக சுட்டு விட்டு, அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்குள் ஓடி விட்டார். இதன்பின், போலீசார் வந்து சந்தீப்சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்து விட்டது உறுதியானது.

சந்தீப்சிங் உடையில் இருந்த கேமராவில் அந்த மர்மநபரின் படம் பதிவாகியிருந்தது. இதைக் கொண்டு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த மர்மநபரையும், அவருடன் வந்த பெண்ணையும் பிடித்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
சந்தீப்சிங், அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகளில் இடம் பெற்று பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அவர் பணியில் சேர்ந்த பிறகும் சீக்கிய மதக் கோட்பாடுகளில் தீவிரமாக இருந்ததால், சீக்கியர் அணியும் தலைப்பாகை அணிந்து கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சந்தீப்சிங் கொலை குறித்து கேள்விப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாங்கள் சமீபத்தில்தான் ஹுஸ்டனுக்கு வந்து விட்டு சென்றோம். இந்த ஊரில் தற்போது சீக்கிய அதிகாரி சந்தீப்சிங் கொலையானது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ெகாள்கிறேன்என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை