ராஜபக்சே மகன் திடீர் கைதால் பரபரப்பு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Namal Rajapaksa

இலங்கையில் உள்ள மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது, இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, போராட்டங்களையும் நடத்து வருகின்றனர். ஆனால், இத்தகைய போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தடையை மீறி, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே இந்திய தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் டிவி சனகா, பிரசன்னா ரனவீரா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தடுப்புகளை மீறி நமல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.