ஊரடங்கை மீறி சுற்றினால் கண்டதும் சுட உத்தரவு.. தெலங்கானா முதல்வர் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 25, 2020, 10:20 AM IST

மக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாடினால், கண்டதும் சுட உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 4.22 லட்சம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தாலியில் கடந்த 4 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் இது வரை 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 19,500 பேருக்கு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று கூறுகையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடக் கூடாது. தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உத்தரவையும் மீறி கூட்டமாக கூடினால், ராணுவம் வரவழைக்கப்படும். சில இடங்களில் விதிகளை மீறி மீண்டும், மீண்டும் கூடுகிறார்கள். இது தொடர்ந்தால், கண்டதும் சுட உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லைஎன்றார்.


Leave a reply