அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால், அந்நாட்டில் சாவு எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 1257 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால், அந்நாட்டில் சாவு எண்ணிக்கை 52,217 ஆக அதிகரித்துள்ளது. இது வரை அங்கு 9 லட்சத்து 25,758 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.
ஸ்பெயினில் 2 லட்சத்து 19,764 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 22,564 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 92,994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25,969 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் ஒரு லட்சத்து 59,828 பேர் பாதித்த நிலையில், 22,245 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 43,464 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 19,506 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் 82,800 பேருக்கு கொரோனா பாதித்திருந்தது. அதன்பிறகு, புதிதாக ஓரிருவருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பலி எண்ணிக்கையும் 4632 என்ற அளவிலேயே உள்ளது. இந்தியாவில் 24,506 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 775 பேர் உயிரிழந்துள்ளனர்.