அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், இத்தாலியில் பழமையான சிலை அருகே சிறுநீர் கழித்ததால் ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தாலிக்கு சுற்றுலா சென்றார். அங்கு, மக்களால் புனிதமாக போற்றப்படும் 16ம் நூற்றாண்டின் பழமையான ஹெர்குலஸ் சிலை அருகே சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சுற்றுலாப் பயணியின் இந்த செயலை பார்த்த செக்யூரிட்டி உடனே அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இது குற்றச் செயல் இல்லை என்றாலும், பொது இடத்தில் அதுவும் மக்களால் புனிதமாக போற்றப்படும் சிலை அருகே சிறுநீர் கழித்தது தவறாகும் என்றனர். இதனால், இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், அபராதத்தை கட்ட தவறினால் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, அமெரிக்க சுற்றுலாப் பயணி ரூ.8 லட்சம் அபராதத்தை கட்டிவிட்டு சொந்த நாட்டிற்கே சோகத்துடன் திரும்பி உள்ளார்.