மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் விளாடிமிர் புதின்..!

Mar 19, 2018, 08:41 AM IST

ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ரஷ்யாவின் அதிபருக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் பதவி வகித்து வந்த விளாடிமிர் புதின் உள்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் விளாடிமிர் புதின் எதிர்கட்சி வேட்பாளர்களை எளிதில் தோற்கடித்துவிடுவார் என தெரியவந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 94.80 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் 76.56 சதவீதம் வாக்குள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பவெல் குருடினின் 11.92 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம், விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

மொத்த வாக்குகள் எண்ணிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்ற 80 லட்சத்து 50 ஆயிரத்து 978 வாக்குகளை விட 4 கோடியே 36 லட்சத்து 53 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் விளாடிமிர் புதின் 5 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 184 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மீண்டும் ரஷ்ய அதிபராகிறார் விளாடிமிர் புதின்..! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை