அசாத்திய மிக்க தனது பலத்தால் உலக நாடுகளை தனது வலைக்குள் கொண்டுவர சீனா முயன்று வருகிறது. இதற்கு அமெரிக்க கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இப்போது அமெரிக்கா உடன் மேலும் சில நாடுகள் சேரவுள்ளன. ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சுவீடன், நார்வே ஆகிய நாடுகள் தான் அவை. இந்த 8 நாடுகளும் பொருளாதார ரீதியாக சீனா உலக நாடுகளுக்கு கொடுக்கும் அழுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர முடிவெடுத்துள்ளன.
அதன்படி உலக நாடுகளின் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது. சீனாவின் நிறுவனங்கள் பிற நாட்டு நிறுவனங்களை வாங்குவதை எதிர்ப்பது என்று முடிவு செய்துள்ளன. சீனா தென் சீன கடல் எல்லை, தைவான் ஆகிய நாடுகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரவும் தயாராகி வருகின்றன இந்நாடுகள். இதற்கிடையே, ஜெர்மன் முன்னாள் உளவுத்துறைத்தலைவர் ஹெகார்ட் ஷிண்ட்லர், சீனா மூன்றாம் உலகப்போரை தூண்டி அதன்மூலம் உலகின் அதிக சக்திவாய்ந்த நாடாக சீனாவை மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதை ஜெர்மனி குறைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மூன்றாம் உலகப்போர் ஏற்படும்பட்சத்தில், ஐரோப்பா தான் போர் நடைபெறும் போர்க்களமாக இருக்கும் என்றும், சீனா ஜெர்மனியை அந்த போரின் அச்சாணியாக பார்த்து வருகிறது என்றும் ஜெர்மனிக்கு வலியுறுத்தியுள்ளார்.