அமெரிக்க தேர்தலை ஆட்டுவிக்கும் கொரோனா

கொரோனா களேபரங்களுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3 ம் தேதி நடக்கிறது. அந்நாட்டு தேர்தலில் முக்கிய பிரச்சினைகளை எல்லாம் கொரோனா ஒதுக்கி வைத்துவிட்டது. அந்த அளவிற்கு தேர்தலை கொரோனா ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. பிரசாரம் தொடங்கியதுமே சீனாவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த டிரம்ப், முகக்கவசம் அணியாமல், இயல்பாகவே இருந்தார். கூடிய விரைவில் தொற்று கட்டுக்குள் வந்துவிடும், மாத்திரைகளை மட்டும் எடுத்தால் போதும் என்று கூலாகவே இருந்தார்.

எதிர் தரப்பான ஜனநாயக கட்சியோ கொரோனா தொற்றை கட்டுப்படுத்தாத டிரம்ப், கொரோனா தொற்று பரவலை ஊக்குவிக்கிறார் என சாடியது. அக் கட்சியின் பிரச்சார கூட்டங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாட்டுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சியின் பிரச்சார கூட்டங்களில் இவையனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது. கடும் விமர்சனங்கள், எச்சரிக்கைகள் என எதற்கும் காத்து கொடுக்காமல் இருந்த டிரம்பையும் கொரோனா தொற்றிக்கொண்டது. ஆனாலும், தன்னுடைய நிலையில் உறுதியாக இருந்த டிரம்ப், சிகிச்சையில் இருக்கும்போதே முகக்கவசம் அணியாமல் காரில் ஹாயாக வெளியே வந்து தொண்டர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.

இதன் காரணமாக, ஜோபிடன் அவருடனான நேரடி விவாதத்தையும் ரத்து செய்துவிட்டார். ஆனாலும், டொனால்டு டிரம்ப் சளைக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்நோக்கும் நிலையிலும் முழு ஊரடங்கு எல்லாம் கொண்டுவர மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், டிரம்ப் கொரோனாவை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஜோபிடன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரம் தொடர்பான மோதல், அமெரிக்க தேர்தலில் முடிவில்லாமல் செல்கிறது. இதனிடையே ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, டொனால்ட் டிரம்பின் பிரசார பேரணிகளில் அதிக அளவு மக்கள் கூடுவது ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 20லிருந்து, செப்டம்பர் 22 வரை யான நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரணிகள் மற்றும் பிரசார கூட்டங்களை யொட்டி, பதிவான கரோனா வழக்குகளின் பட்டியலின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கூட்டங்களுக்கு வந்தவர்களில் 30,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கொரானா உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வை கூட தன்வசப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds

READ MORE ABOUT :