பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான, மலாலா யூசுப்சாய், 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் திரும்பி உள்ளார்.
பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் பிறந்த மலாலா. அப்பகுதியில் பெண்கள் பள்ளி செல்ல தாலிபானின் தடை விதித்தனர். தடைடையை மீறி மல்லாலா பள்ளி சென்றுவந்தார். மேலும் தனது 12வது வயதில் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் குறித்து, செய்தி தொலைக்காட்சிக்கு உருது மொழியில் கட்டுரைகள் எழுதினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தாலிபன்கள் கடந்த 2012ஆம் ஆண்டு மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் படுகாயம் அடைந்த மலாலா நீண்ட சிகிச்சைக்கு பின்பு லண்டன் சென்றார். லண்டனில் கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளிப் படிப்பை முடித்தார்.
உலகளவில் குழந்தைகள் கல்வி குறித்தும், அனைத்து பெண்களும் கல்வி கற்கவும், எந்தவித அச்சமும் இன்றி வாழ்வில் முன்னேறவும் அவர் தனது தந்தை சியாவுதினுடன் சேர்ந்து மலாலா நிதி அமைப்பை உருவாக்கினார். இதனால், கடந்த 2014ம் ஆண்டு மலாலாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தற்போது, 20 வயதாகும் மலாலா 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் திரும்பியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.