ஒரு கிலோ அரிசி 7 ஆயிரம் ரூபாய்

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி கிலோ 7,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இது கின்னஸ் புத்தகத்திலும் சாதனையாகப் பதிவாகியுள்ளது

by Balaji, Nov 12, 2020, 11:54 AM IST

நம்மூரில் ஒரு கிலோ அரிசி 35 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ரகங்கள் அதிகபட்சம் கிலோவுக்கு 200 ரூபாய் வரை வைக்கப்படுகிறது.அதேசமயம் கின்மேமை பிரிமியம் (kinmemai premium) என்ற ரக அரிசி கிலோ 7,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உலகில் அதிக விலையுயர்ந்த அரிசி இதுதான்.உலகின் மிக விலையுயர்ந்த அரிசி என கின்னஸ் புத்தகத்திலும் இந்த அரிசி இடம் பெற்றுள்ளது.இந்த அரிசியை டோயோ ரைஸ் கார்ப்பரேஷன் (Toyo Rice Corp) என்ற ஜப்பானிய நிறுவனம் விற்பனை செய்கிறது.

கின்மேமை பிரிமியம் 2016-ம் ஆண்டில் இது உலகில் மிக விலை உயர்ந்த அரிசியாக கின்மேமை பிரிமியம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜப்பானில் வருடம் தோறும் நடைபெறக்கூடிய வருடாந்திர சர்வதேச அரிசி போட்டியில் இடம்பெற்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகளிலிருந்து இந்த அரிசி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

ஜப்பானின் குன்மா, நாகானோ மற்றும் நைகட்டா போன்ற மாகாணங்களிலிருந்து நிகோமாரு போன்ற உயர்தர பிராண்டுகளிலிருந்து இந்த அரிசி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த போட்டியில் தானியங்களின் ஒவ்வொரு அம்சமும் ஆராயப்படும்.தானியங்கள் சமைப்பதற்கு முன்பு, சமைத்த பிறகு எப்படி இருக்கிறது என்று சோதித்து அதில் சிறந்த தானியங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த அரிசி பஞ்சு போல மிகவும் மென்மையாக மிகமிக சுவையாக இருக்குமாம்.

ஐந்து வகை அரிசியைக் கலந்து இந்த அரிசி உருவாக்கப்படுகிறது.ஆறுமாதம் அப்படியே வைத்திருந்தால்தான் நல்ல சுவை கிடைக்கும். இந்த அரிசி டொயோ ரைஸ் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெல்லிலிருந்து உமியை நீக்கி தயாராகிறது. எனவே இந்த அரிசியை மற்ற அரிசியைப் போலச் சமைக்கும் முன்னால் தண்ணீரில் கழுவக்கூடாது என்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் நெல்லிலிருந்து உமியை மட்டும் நீக்கும். கிட்டத்தட்ட நம்ம ஊரில் உள்ள கைக்குத்தல் அரிசி டெக்னிக் தான் இது. . இந்த அரிசியில் பிரவுன் மற்றும் வெள்ளை அரிசி என இரண்டு வகைகளும் உண்டு.இந்த அரிசியில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. வைட்டமின்கள் பி1, பி6,பி,ஈ, போலிக் அமிலம் போன்ற சத்துக்களையும் கொண்டது என்கிறார்கள்.

இந்த சத்துக்கள் எல்லாம் சேர்ந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலம் பெறச் செய்யும். கூடவே புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியக்கூறுகளையும் குறைக்குமாம். இந்த அரிசியில் வைட்டமின்கள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்கிறது.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை