ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம்

Advertisement

அமெரிக்காவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்றுடன் 50வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் பங்கேற்று ஆவேச உரையை நிகழ்த்தினார். திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.

இந்த போராட்டக்களம் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் சூடு பிடித்துள்ளது.

கடந்த வாரம் லண்டனில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதைதொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள கார்லோட் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா&கனடா வாழ் தமிழர்கள் அமைதி பேரணி நடத்தினர்.

இதில், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், காப்பர் தொழிற்சாலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகங்களும் அங்கு அரங்கேறின.

அமெரிக்காவில், கார்லோட் பகுதியை தவிர பாஸ்டன், நியூயார்க், கிளாஸ்கோ பார்க், டல்லாஸ், வாஷிங்டன், மோரிஸ் வில்லே, டோர்னடோ, கூபர்டினோ, ஆல்பெட்டா ஆகிய நகரங்களிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

 - thesubeditor.com

Advertisement
/body>