அமெரிக்காவில் மாயமான இந்தியப் பெண்ணின் சடலம் மீட்பு

Advertisement

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த குடும்பத்தினர் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்றபோது காணாமல் போனதையடுத்து, பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்தவர் சந்தீப் (42). இந்தியரான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு, மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி சந்தீப் தனது குடும்பத்தினருடன் காரில் போர்ட்லேண்ட் நகருக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென நான்கு பேரும் மாயமாகினர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் தேடி வந்தனர். இதில், சந்தீப்பின் கார் ஹம்போல்ட் நகர் அருகே கார்பர் வில்லே என்ற இடத்தில் வெள்ளம் கரை புரண்டோடுகிற ஏல் ஆற்றில் அடித்துச் செல்லபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, இவர்களை மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதில், சவுமியாவின் உடலை ஏல் நதியில் கார் அடித்துச் செல்லபட்ட இடத்தில் இருந்து 7 மைல்கள் வடக்கே 13ம் தேதி கைப்பற்றி உள்ளனர். மேலும், அடித்து செல்லப்பட்ட காரின் பாகங்களும் சேகரிக்கப்பட்டன. மேலும், சந்தீப் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 - thesubeditor.com

Advertisement
/body>