ஜப்பானில், 10 ஆண்டுகளாக தாயின் பிணத்தை ஃபிரீசரில் பதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் தான் யூமி யோஷினோ. இவர் வீட்டின் வாடகையை சரியான நேரத்தில் செலுத்த தவறியதால் வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதன் கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்ய பணியாளர்கள் வந்துள்ளனர். அப்பொழுது ஒருத்தர் ஃபிரீசரை திறந்து சுத்தம் செய்த பொழுது ஒரு பெண்ணின் சடலம் அவர் மேல் விழுந்துள்ளது. இதை பார்த்து பயந்து அலறியடித்து அனைவரும் வெளியே ஓடிவிட்டனர். பிறகு இதைப்பற்றி போலீஸிடம் புகார் அளித்து போலீஸை வரவழைத்தனர்.
போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு யூமி யோஷினோ என்பரிடம் விசாரணை நடந்தது. அப்பொழுது அவர் சில அதிர்ச்சி தக்க தகவல்களை கூறினார். அதாவது அந்த சடலம் அவரது தாய் எனவும், அவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகின்றது என்று கூறினார். வீட்டின் வாடகை பொறுப்பு இவரது தாயின் பெயரில் உள்ளது. இந்த சூழலில் இவர் இறந்தாது வெளியே தெரிந்தால் நாங்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதற்காக எனது தாயின் உடலை பதப்படுத்தினேன் என்று விசாரணையில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.