பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலுக்கு சீன அரசு தடை.. ஏன் எதற்கு... பின்னணி விவரம்!

by Sasitharan, Feb 12, 2021, 18:41 PM IST

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்தி வெளியிட்டதால், பிரபல செய்தி நிறுவனமான பிபிசி வேர்ல்டு நியூஸ் தொலைக்காட்சிக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. பிபிசி வேர்ல்டு சேனலை சீனா தடை விதித்தற்கு இதுவரை சரியான காரணம் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், செய்தி நிறுவனமும், சீன அரசும் தங்களுக்கு ஏற்ப கருத்துகளை தெரிவித்துள்ளனர். எனவே, தான் யார் தரப்பில் உண்மை உள்ளது என் கேள்விக்கு பதில் விடுகதையாகதான் உள்ளது.

இது தொடர்பாக சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பிபிசி தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகளை உகந்த முறையில் ஒளிபரப்பவில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிட்டு, சீனாவின் தேசிய எண்ணங்களை காயப்படுத்தியதோடு, தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது. எனவே தான், பிபிசி சேனல், சீனாவில் ஒளிபரப்பு தேவையை இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிபிசி வேர்ல்டு நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம், உய்குர் இஸ்லாம் சிறுபான்மையினர் மீதான சீன அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளை பிபிசி ஒளிபரப்பியது. சிங்கியாங்கில் "மறு கல்வி முகாம்கள்" என்று அழைக்கப்படும் முகாம்களில் உய்குர் பெண்கள் "பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு சீன அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பிபிசி கூறுகையில், வுஹானில் கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் சீன அரசாங்கம் அதை எவ்வாறு மூடிமறைத்தது என்று மற்றொரு ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து, செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டது. சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப பிபிசிக்கு அனுமதி இல்லை, மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சீன அரசு தடை விதித்துள்ளது உலகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

You'r reading பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலுக்கு சீன அரசு தடை.. ஏன் எதற்கு... பின்னணி விவரம்! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை