தமிழகத்தை தொடர்ந்த் ஸ்வீடன், லண்டனில் மோடியை விரட்டிய தமிழர்கள்!

தமிழகத்தை தொடர்ந்த் ஸ்வீடன் மற்றும் லண்டனிலும் திரும்பி போ மோடி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

by Lenin, Apr 20, 2018, 00:45 AM IST

தமிழகத்தை தொடர்ந்த் ஸ்வீடன் மற்றும் லண்டனிலும் திரும்பி போ மோடி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மத்திய பாஜக அரசு மீதுதமிழக மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது, அந்த கோபம், கறுப்புக் கொடிகளாகமாறி, அவர் செல்லும் இடங்களிலெல்லாம் விரட்டியடித்தது.

‘திரும்பி போ மோடி’ (Go Back Modi) என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் அதிர்ந்தது. தமிழகத்தின்‘Go Back Modi’ டிவிட்டரில் அன்றைய தினம் உலகளவில் டிரெண்ட் ஆனது. சாலையில் பயணிக்க முடியாமல், அடுத்த தெருவுக்குக் கூட ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது.

அப்படியும் அசராத போராளிகள் வானுயர பறக்கவிடப்பட்ட கறுப்புப் பலூன்கள், மோடியை அச்சுறுத்திவிட்டன. பின்கேட் வழியாக சென்றும், சென்னை ஐஐடி மாணவர்கள் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி, தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதனிடையே, அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் சென்ற நிலையில், அங்கும் தமிழர்கள் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி அதிர வைத்துள்ளனர். ‘திரும்பிப் போ மோடி’ என்ற முழக்கங்கள் லண்டனிலும் எதிரொலித்து, மோடியை விரட்டியடித்துள்ளது.

முன்னதாக, மோடி ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றபோதும் அவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மோடி தங்கியிருந்த ஹோட்டல் முன்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழகத்தை தொடர்ந்த் ஸ்வீடன், லண்டனில் மோடியை விரட்டிய தமிழர்கள்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை