இங்கிலாந்து நாட்டில் பால் ஏற்றிவந்த டேங்கர் லாரி ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் பால் அனைத்தும் ஆற்றில் கொட்டியது.
இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் டுலைஸ் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்நிலையில், பால் நிறுவனம் ஒன்றிற்கு கொண்டு செல்வதற்காக டேங்கர் லாரி ஒன்று பால் ஏற்றிக்கொண்டு கார்மர்தென்ஸ்ரீங் பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளது.
பால் நிறுவனத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் டேங்கர் லாரியை அதிவேகமாக இயக்கியுள்ளார். சாலையில் லாரி தரிகெட்டு ஓடியபோது முன்னே சென்ற வாகனம் ஓன்று திடீரென நின்றுள்ளது. இதனால் ஓட்டுநர் லாரியை திரும்ப முயன்றுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த டுலைஸ் ஆற்றில் கவிழ்ந்தது. அப்போது பால் டேங்கின் மூடிகள் திறந்து பால்கள் அனைத்து ஆற்றில் கொட்டின.
விபத்துக்குள்ளான லாரியில் இருந்து ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆற்றுக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
டேங்கர் லாரியில் இருந்த பால் முழுவதும் ஆற்றில் கலந்ததால் ஆறு முழுவதும் வெண்மை நிறத்தில் பாலாறாக காட்சியளித்தது.
இந்த விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தள்ளனர். டேங்கர் லாரியில் இருந்து மொத்தப்பாலும் கொட்டியதால், பால் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.