பிரிட்டனின் ஐந்தாம் வாரிசு: மக்கள் முன் இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்!

by Rahini A, Apr 27, 2018, 18:26 PM IST

பிரிட்டன் அரியணையின் ஐந்தாம் வாரிசாக இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்ஸ் ஆவார். இளவரசர் வில்லியம்ஸ்-க்கும் அவரது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்றாவது குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு அரச குடும்பத்தினர் 'இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இனி இளவரசர் லூயிஸ் 'கேம்பிரிட்ஜின் இளவரசர் லூயிஸ்' என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதியர் தங்களது மூன்றாவது குழந்தையுடன் இன்று மக்கள் முன்னிலையில் தோன்றி, அதிகாரப்பூர்வமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இளவரசர் வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதியருக்கு ஜார்ஜ், செரோலட் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பிரிட்டனின் ஐந்தாம் வாரிசு: மக்கள் முன் இளவரசர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை