தென் விரிகுடா தமிழ் சங்கத்தின் பிரம்மாண்ட இசைத் திருவிழா!

தென் விரிகுடா தமிழ் சங்கத்தின் பிரம்மாண்ட இசைத் திருவிழா!

by Suresh, Apr 27, 2018, 21:06 PM IST

தென் விரிகுடா தமிழ் சங்கம் சார்பில் 3-அம் ஆண்டு விழா மற்றும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கின்னஸ் சாதனையாளர் ராக பிரியாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளது.

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் தென் விரிகுடா தமிழ் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைவிட்டு சென்றாலும், தமிழுக்கும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் உயிராய் வழிநடத்தி வருகிறது தென் விரிகுடா தமிழ் சங்கம். இந்த சங்கம் சார்பில் ஆண்டு தோறும் ஆண்டு விழா மற்றும் சித்திரை திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், 2018-அம் ஆண்டுக்கான சித்திரை திருவிழா மற்றும் தென் விரிகுடா தமிழ் கல்வியின் மூன்றாம் ஆண்டு விழா கொண்டாட்டம் ஏப்ரல் 28-அம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறுகிறது.
இதில், முக்கிய நிகழ்வாக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

குறிப்பாக, தமிழில் இயக்குனர் சேரனின் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் பிரபலமான கின்னஸ் சாதனையாளர் ராகப் பிரியா அவர்களின் இசைக்குழு நேரலை கச்சேரியை நடத்த இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு வருந்தினராக காஞ்சனா படத்தில் வரும் அறிமுகப்பாடலில் ஒரே காலில் நடனமாடி அனைவரையும் ஈர்த்த பிரபு தாஸ் ஆவர்களும் பங்கேற்கிறார். கலிபோர்னியா, ஹார்பர் சிட்டியில் உள்ள சவுத் வெஸ்டெர்ன் அவென்யூ, நார்போன் உயர் பள்ளி ஆடிட்டோரியத்தில் வரும் 28-அம் தேதி மதியம் 1.30 மணிக்கு இசை கச்சேரி ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை கச்சேரிக்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.

இதற்கான நுழைவுச் சீட்டுக்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, பெரியவர்களுக்கு $20, குடும்பத்தினருக்கு (2 பெரியவர்கள், 2 சிறியவர்கள்) $70 மற்றும் 10 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு $15ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் http://Sulekha.com/sbts என்ற இணைய முகவரியில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தென் விரிகுடா தமிழ் சங்கத்தின் பிரம்மாண்ட இசைத் திருவிழா! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை