பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் கடந்த 2016ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்படி, இவர்களின் திருமணம் மே மாதம் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹாரி மற்றும் மேகன் திருமணத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். ராணி எலிசபெத் கையப்பமிட்ட ஒப்புதல் கடிதத்தை பக்கிங்காம அரண்மனை வெளியிட்டுள்ளது.