குடிபெயர்ந்தவர்கள் மனிதர்களல்ல, மிருகங்கள் - ட்ரம்ப்

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மனிதர்களல்ல, மிருகங்கள் - ட்ரம்ப்

May 19, 2018, 08:04 AM IST

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களுள் சிலரை 'மிருகங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப். கலிபோர்னியாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த குடியரசு கட்சியினருடனான சந்திப்பின்போது இவ்வாறு கூறினார்.

எல்லை சுவர், சட்டத்தை அமுல்படுத்துதல் குறித்ததான விவாதத்தின்போது, “நமது நாட்டிற்குள் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களல்ல; மிருகங்கள். நாம் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம்," என்று டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.

எல்ஸ்வெடார் நாட்டோடு நெருங்கிய தொடர்புடைய, அமெரிக்காவை மூலமாக கொண்ட எம்எஸ்13 என்ற குழுவினரை ட்ரம்ப் எப்போதும் 'மனிததன்மையற்றவர்கள்', 'கொலைபாதகர்கள்' என்று கூறுவதுண்டு. அடிக்கடி அவர்களை குறிப்பிடுவதற்கு பதிலாக, பொதுப்படையாக 'குடிபெயர்ந்தவர்கள்' என்று அவர் கூறிவிடுகிறார்.

“ட்ரம்ப்பின் சமீபத்திய உரைகள், யூதர்களுக்கு எதிராக நாஸிக்கள் பயன்படுத்திய வார்த்தைகள்போல் காணப்படுகின்றன” என்று ஜனநாயக கட்சியினர் கண்டித்துள்ளனர்,

“குடிபெயர்ந்தவர்கள், மிருகங்களல்ல, குற்றவாளிகளல்ல, போதை பொருள் கடத்துபவர்களல்ல, பாலியல் வன்கொடுமை செய்பவர்களல்ல. அவர்கள் மனிதர்கள்தாம்” என்று கொலராடாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜாரட் பொலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

“குடிபுகுதலை குறித்து, குற்றங்களை குறித்து, கலிபோர்னியாவின் சட்டங்களை குறித்து அதிபர் ட்ரம்ப் பொய்யுரைக்கிறார்” என்று கலிபோர்னியா ஆளுநர் ஜெரி பிரௌன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குடிபெயர்ந்தவர்கள் மனிதர்களல்ல, மிருகங்கள் - ட்ரம்ப் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை