ட்ரம்ப்புக்கு அந்த வித்தியாசம் தெரியாது - பில் கேட்ஸ்

ட்ரம்ப்புக்கு அந்த வித்தியாசம் கூட தெரியாது - பில் கேட்ஸ்

May 20, 2018, 08:16 AM IST

அதிபர் ட்ரம்ப்பை தான் இருமுறை சந்தித்துள்ளதாகவும் அப்போது அவர் தம்மிடம் ஒரு சந்தேகத்தை கேட்டதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

பில் கேட்ஸின் உரை ஒன்றின் ஒளிப்பதிவு சமீபத்தில் வெளியானது. பில் அன்ட் மெலினா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற சேவை அமைப்பின் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது பில் கேட்ஸ் இப்படி கூறியுள்ளதாக தெரிகிறது.

'ஹெச்ஐவி, ஹெச்பிவி இரண்டும் ஒன்றா?' என்று அதிபர் தன்னிடம் கேட்டதாகவும், இரண்டையும் குழப்பிக் கொள்ள வாய்ப்புகள் குறைவு என்று தாம் தெரிவித்ததாகவும் பில் கேட்ஸ் அந்த உரையில் கூறியுள்ளார்.

உடலுறவின்போது கடத்தப்படும் ஹெச்பிவி என்னும் ஹியூமன் பாபிலோமா வைரஸ், சாதாரணமாக அறியப்படும் வைரஸ். இதன் பாதிப்புக்கு பெரும்பாலும் அறிகுறி தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட சில உடல்நல கோளாறுகளை உண்டாக்கக்கூடியது. அமெரிக்க பதின்ம வயதினர் மற்றும் இருபதுகளின் தொடக்கத்திலிருப்போருக்கு பெரும்பாலும் இவ்வைரஸ் தொற்று காணப்படுகிறதாம். இதற்கு தடுப்பூசி உண்டு.

மாறாக, தடுக்க முடியாத வைரஸ் ஹியூமன் இம்யூனோ டெபிஸியன்ஸி வைரஸ் என்னும் ஹெச்ஐவி. எய்ட்ஸ் நோயை உருவாக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து மனித உயிரை காவு வாங்கி விடக்கூடியது. 2016-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க கணக்கெடுப்பின்படி 10 லட்சம் பேர் ஹெச்ஐவியினால் பலியாகியுள்ளனர்.

பில் கேட்ஸ், அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர். டிரம்ப் தம்மை வெள்ளை மாளிகையின் அறிவியல் ஆலோசகராக இருப்பதற்கு அழைத்ததாகவும், தாம் அதை மறுத்துவிட்டதாகவும் ஏற்கனவே தெரிவித்துள்ள பில் கேட்ஸ், ட்ரம்ப் டவரில் ஒருமுறையும், வெள்ளை மாளிகையில் ஒருமுறையும் தாம் அதிபரை சந்தித்ததாக கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ட்ரம்ப்புக்கு அந்த வித்தியாசம் தெரியாது - பில் கேட்ஸ் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை