திருமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கலிபோர்னியா வாழ் தமிழர்கள் (வீடியோ)

Advertisement

பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தி பேஸ்புக்கில் பதிவிட்டாக குற்றம்சாட்டப்பட்டுள்ள எஸ்.வி.சேகர் விவகாரத்தில் மூலக் காரணமாக இருக்கும் திருமலை வீட்டிற்கு எதிரே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக திருமலை எழுதி தனது பேஸ்புக்கில் ‘மதுரை யூனிவர்சிட்டியும், கவர்னரும், பின்னே கன்னிப்பெண்ணின் கன்னமும்’ என்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை தான் எஸ்.வி.சேகர் அவரது பேஸ்க்கில் பகிர்ந்து பெரும் கண்டனத்திற்கு ஆளாகினார்.

யாரோ ஒருவர் பதிவிட்டிருந்த பதிவை பகிர்ந்ததற்கே எஸ்.வி.சேகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே, இந்த பதிவிற்கு மூலக்காரணமாக இருக்கும் திருமலை மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று கலிபோர்னியா தமிழர்கள் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் திருமலை இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், கலிபோர்னியா மவுண்ட் ஹவுஸ் நகரத்தில் வசித்து வரும் திருமலை வீட்டின் எதிரே கலிபோர்னியா தமிழர்கள் ஏராளமானோர் கண்டன வாசகங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement
/body>