H-4 Visa-அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு?

H-4 Visa - அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஹெச்-4 விசா பற்றி ஓர் நற்செய்தி!

May 22, 2018, 09:05 AM IST

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. ஹெச்-1 பி விசா பெற்று பணிபுரிபவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் விசா ஹெச்-4. இந்த விசா பெற்றவர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஹெச்-4 விசாவை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். ஏறத்தாழ 70,000 ஹெச்-4 விசாதாரர்கள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் உயர்திறன் பெற்ற இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் வாழ்க்கை துணைகளே இவ்விசா பெற்றிருக்கின்றனர்.

ஹெச்-4 விசா வைத்திருப்போரின் பங்கு அமெரிக்காவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. எனவே, அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 130 பேர் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் சேவையின் செய்தி தொடர்பாளர் பீட்டர் ஸ்மித், "அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை பணியில் அமர்த்துங்கள் என்ற அதிபரின் நிர்வாக ஆணைக்கேற்ப சில கொள்கைகளில், ஒழுங்குமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்க பணியாளர்களின் நலன் கருதி, அமெரிக்க குடியேற்றம் மற்றும் குடிபுகல் செயல்பாடுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய பொருளாதா நோக்கில் குடிபுகல் துறை விசா வழங்கும் நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது.

எந்த சட்ட வரைவும் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். புதிய சட்ட உருவாக்கப்பணி முடிவடையும் வரைக்கும் ஹெச்-4 விசா குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading H-4 Visa-அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு? Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை