அகதிகள் குறித்த தனது நிலைப்பாடு காரணமாகவும், சுற்றுச்சூழல் குறித்து தெளிவுக்காகவும், ட்விட்டரில் அவ்வப்போது போடு சில பேரின்ப பதிவுகளுக்காகவும் உலகத் தலைவர்களில் மிகப் பிரபலமாக இருப்பவர் கனடா பிரதமர் ட்ரூட்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு அவர் குடும்பத்துடன் வந்து ஏறக்குறைய ஒரு வாரம் சுற்றுப் பயணத்தில் இருந்தார். அப்போது உள்ளூர் மீடியாவில் இருந்து சர்வதேச மீடியா வரை ட்ரெண்டானது ட்ரூட்-ம் அவரது குடும்பமும் தான். குறிப்பாக, இந்திய உடைகளில் அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்றதும், அங்கெல்லாம் அவர்கள் குடும்பத்துடன் போட்டவுக்கு போஸ் கொடுத்ததும் இன்னும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய பயணம் குறித்து நகைச்சுவையான முறையில் பொது மேடையில் கலாய்த்துள்ளார் ட்ரூட். பயணம் குறித்து அவர் பேசுகையில், `இந்தியப் பயணத்தை முடித்த பிறகு இனி போகவே கூடாது என்று நினைத்தோம். குறிப்பாக, நாங்கள் குடும்பமாக இந்திய உடையில் போஸ் கொடுத்ததை பத்திரிகைகள் கிண்டல் செய்து கொண்டாடின.
ஏட்ரியனும் அவன் பங்கிற்கு விளையாடித் தீர்த்தான். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், இந்தியப் பயணம் நன்றாகவே இருந்தது. நான் அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சரால் வரவேற்கப்பட்டேன். இது உலகத் தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத பாக்கியமாம்.
மிகச் சாதரணமாக உடை அணிந்திருந்த ஷாருக் கானைப் பார்த்து கிண்டல் அடித்தேன். இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் அந்த ஒரே ட்ரிப் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. மற்ற எல்லா நாட்டுக்கும் பயணப்படுவது போல அல்ல இந்தியா. இது தனி கதை' என்று கூறியுள்ளார்.