வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

Advertisement

அமெரிக்காவில் உள்ள வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில், மாணவர்களுக்கான கல்லூரி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Bay Area Tamil Manram

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழர் நலன்களுக்காக பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள பிரபல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வளைகுடா தமிழ் மன்றம் ஏற்பாடு செய்தது.

Bay Area Tamil Manram

ஜூன் 2-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் Irvington Community Center 41885, Blacow Rd, Fremont, California 94538 என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

Bay Area Tamil Manram

யுசி ஈசி ஸ்பான்சர் செய்த இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.

Bay Area Tamil Manram

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவில் உள்ள பிரபல கல்லூரிகளில் சேர்வதற்கான வழிமுறைகள், கல்லூரி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்ய வேண்டிய முக்கிய பங்குகள், ஆசிரியர் பெற்றோர் மாணவர் கவுன்சிலரின் முக்கிய பங்கு உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Bay Area Tamil Manram

நிகழ்ச்சியின் முடிவில், யுசி ஈசி மற்றும் அனைத்து ஸ்பான்சர்களுக்கும் வளைகுடா தமிழ் மன்றம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement
/body>