கலிபோர்னியாவின் வடபகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த யோலோ மற்றும் நேபா கவுண்டி பகுதிகளில் காட்டுத் தீ பற்றியது.
கோடையில் காய்ந்த புற்கள் மற்றும் புதர்களில், இலையுதிர் காலத்தில் வீசும் காற்றின் காரணமாக தீப்பற்றுவது வழக்கம்.
கலிபோர்னியாவின் தலைநகர் சாக்ரமெண்டோவிலிருந்து ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் தொலைவில் 243 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இது எரிந்தது. சனிக்கிழமை பிற்பகலில் பற்றிய தீ, பொழுது சாயும் மாலை வேளையில் குவிண்டா பகுதியில் பரவ ஆரம்பித்தது.
300-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தீயணைப்பு அதிகாரி கிறிஸ் அந்தோணி தெரிவித்துள்ளார்.