ஜப்பானில் இன்று மாலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.0 ஆகப் பதிவு ஆகியுள்ளது.
இன்று மாலை வலுவான நிலநடுக்கம் கிழக்கு ஜப்பானை தாக்கியுள்ளது. இதுகுறிட்ட அதிகாரப்பூர்வ தகவலை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டோக்யோ உள்ளிட்ட கிழக்கு ஜப்பானின் மிக முக்கியமான நகரப் பகுதிகளை இந்த நிலநடுக்கம் வலுவாகத் தாக்கியுள்ளது.
ஜப்பானில் இருந்து 50 கி.மீ தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நடுக்கம் முதலில் உணரப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நில அதிர்வால் டோக்யோ நகரில் பல கட்டிடங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளது.
ஜப்பானின் நரிடா விமான நிலையத்தின் இரண்டு விமான ஓடுதளங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. டோக்கியோவின் அணு உலை பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.