உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பெர்க் மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இதுவரை மூன்றாம் இடத்தில் இருந்த 87 வயது வாரன் பஃபெட்டை, 34 வயது ஸக்கர்பெர்க் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
புளூம்பெர்க் கோடீஸ்வரர் பட்டியலின்படி மார்க் ஸக்கர்பெர்க் தற்போது 8,160 கோடி (81.6 பில்லியன் டாலர்) பணமதிப்பு கொண்டுள்ளார். வாரன் பஃபெட்டின் மதிப்பை விட இது 37.3 கோடி அதிகமாகும்.
தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களே தற்போது கோடீஸ்வரர் பட்டியலில் உச்ச இடங்களை பிடிக்கின்றனர். அதன்படி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பேஜோஸ் முதலிடத்திலும், மைக்ரோசாஃப்ட் உடன்நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
வாரன் பஃபெட் தமது பெர்க் ஷையர் ஹாத்அவே நிறுவனத்தின் 29 கோடி, பி பிரிவு பங்குகளை அறக்கட்டளைக்கு ஒதுக்கியுள்ளார். அவற்றின் மதிப்பு மட்டும் 5000 கோடி ரூபாயாகும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் வாரன் பஃபெட், அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கி வருகிறார். பெரும்பாலும் பில் கேட்ஸின், கேட்ஸ் பவுண்டேஷன் என்ற சேவை நிறுவனத்துக்கு அவர் நன்கொடை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.