சாண்டியாகோ: சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் செபாஸ்டியன் பினேரா அதிக வாக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகி உள்ளார்.
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நாட்டில் முதன்முறையாக வெளிநாடு வாழ் சிலியர்களுக்கும் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோட்டிஸ்வரனும், முன்னாள் அதிபருமான செபாஸ்டியன் பினேரா மற்றும் சோசியலிச கட்சியைச் சேர்ந்த அலேஜாந்த்ரோ கைலியர் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த நிலையில், 54 சதவீதம் வாக்குகள் பெற்று பினரா வெற்றி பெற்றார்.
இதனால், நான்கு ஆண்டு கால இடைவேளைக்கு பிறகு பினேரா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.