மீண்டும் வருகிறது ஒலியைவிட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானம்

ஒலியை விட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானம்!

Jul 23, 2018, 08:47 AM IST

ஒலியை விட வேகமாகச் செல்லும் சூப்பர் சோனிக் விமானங்களைத் தயாரிக்கும் பணியில் பல்வேறு விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

Supersonic flight

ஒலியை விட வேகமாகச் செல்லும் சூப்பர் சோனிக் விமான சேவை நிறுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்நிலையில், சொந்த விமாங்களை வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன், சர்வதேச அளவில் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதனால், ஸ்பைக் ஏரோஸ் பேஸ், ஏரியோன் சூப்பர்சோனிக், பூம் சூப்பர் சோனிக் மற்றும் போயிங் போன்ற விமான தயாரிப்பு நிறுவனங்கள் சூப்பர் சோனிக் விமானங்களை தயாரிக்கும் முயர்ச்சியில் ஈடுப்பட்டுவருகின்றன.

உலகின் எந்த ஒரு இடத்திற்கும் சில மணி நேரங்களில் செல்லும் ஆற்றல் கொண்டது இந்த அதிவேக விமானங்கள். இவை அடுத்த சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதி நவீன தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த அதிவேக விமானங்களில் மக்கள் தொடர்ந்து பயணிக்கும் வகையில் அதன் கட்டணங்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. இதை இந்த வமான நிறுவனங்கள் நிறேவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத்தகைய விமானங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்துவந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மீண்டும் வருகிறது ஒலியைவிட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை