தேர்தல் நேரத்தில் குண்டுவெடிப்பு- பாகிஸ்தானில் பதற்றம்!

Jul 25, 2018, 13:14 PM IST

பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் வாக்கெடுப்பு நடந்து வரும் வேளையில் பலூசிஸ்தான் நகர் அருகே குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டு கால பாகிஸ்தான் வரலாற்றில் இப்போது தான் இரண்டாவது முறையாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவத்தின் தலையீடு, தீவிரவாத அமைப்புகள் போட்டியிடுதல் எனப் பல காரணங்கள் பாகிஸ்தான் தேர்தல் சுமூகமாக நடக்குமா என்பதைக் கேள்விக்குறியாக்கி வைத்திருந்தன. இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் குவெட்டா நகரில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேர்தல் பிரசாரங்களின் போதே பல்வேறு இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. பலூசிஸ்தான் மாகாணத்தில் மட்டும் இது தொடர்பான தாக்குதலில் 151 பேர் கொல்லப்பட்டனர் எனபது குறிப்பிடத்தக்கது ஆகும்.

You'r reading தேர்தல் நேரத்தில் குண்டுவெடிப்பு- பாகிஸ்தானில் பதற்றம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை