சூரியனை சுற்றி எழும்பும் சத்தத்தை பிரித்து வெளியிட்ட நாசா

Jul 28, 2018, 23:24 PM IST

சூரியனை சுற்றி எழும்பும் சத்தத்தை தனியாக பிரித்து நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனை சுற்றி நிறைய இருக்கும் துகள்களும், அணுக்களும் வெவ்வேறு அலைநீளத்தில் சூரியனை சுற்றும். இந்த அலைகள் சூரியனில் ஒருவித ஒலியை எழுப்பும்.

இந்த ஒலி எவ்வாறு இருக்கும் என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து, சூரியனின் சத்தத்தை நாசா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சத்தத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இந்த ஆராய்ச்சிக்காக நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து சோகோ என்ற சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற கருவி மூலம் சூரியனின் சத்தத்தை தனியாக பிரிக்கப்பட்டது” என்றனர்.

You'r reading சூரியனை சுற்றி எழும்பும் சத்தத்தை பிரித்து வெளியிட்ட நாசா Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை