மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருக்கும் சிவா அய்யாதுரை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சிவ ஐயாத்துரை.
இவர் கணினி உலகின் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஈமெயில் நுட்பத்தை கண்டுபித்தவர். ஆனால் இன ரீதியான பாகுபாடு காரணமாக இவருக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது.
தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு சென்ற சிவ ஐயாத்துரை தற்போது அங்குள்ள சிட்டோசொல்வே என்ற நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் தற்போதைய செனட் உறுப்பினர் எலிசபெத் வாரன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுவார் என்று சிவ ஐயத்துறையை எதிர்பார்த்த நிலையில் சுயேட்சையாக நிற்கிறார் என்ற தகவல்கள் பரவின.
இந்நிலையில் சில நாட்கள் முன்னர் டவுன் ஹவுஸ் முன்பு சிறிய ஒளி பெருகி மூலம் பிரச்சாரம் செய்தார் சிவ ஐயாத்துரை. அப்போது அங்கு வந்த எலிசபெத் வாரன் ஆதரவாளர் ஒருவர் சிவ ஐயத்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒளி பெருகியை கையால் தட்டியும்விட்டார். அதில் சிவ ஐயத்துறையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து அங்கு இருந்து அப்புறப்படுத்தினர்.