இந்தியர்கள் டிரான்ஸிட் விசா பெற தேவையில்லை - பிரான்ஸ் அறிவிப்பு

Advertisement
பிரான்ஸ் நாட்டின் எந்த சர்வதேச விமான நிலையம் வழியாகவும் வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் கடப்பு விசா என்னும் டிரான்ஸிட் விசா பெற தேவையில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 23-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிஸ்டென்டைன், லித்துவேனியா, லக்ஸ்சம்பெர்க், மால்ட்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய 26 நாடுகள் இணைந்து செனன் (Schengen) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
இந்தக் கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் குடிமக்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொன்றுக்கு செல்லும்போது, சர்வ தேச எல்லையிலுள்ள எந்த சோதனையோ, பாஸ்போர்ட்டோ தேவையில்லை. 
 
செனன் நாடுகளின் விமான நிலையங்களில் இறங்கி, வேறு நாடுகளுக்கு விமானம் ஏறுவோர், கடப்பு விசா (transit visa) பெற வேண்டும். அந்தக் கூட்டமைப்பிலுள்ள பிரான்ஸ், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு அதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
 
"பிரான்ஸ் தேசத்தின் சர்வ தேச மண்டலத்திலுள்ள எந்த விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டாலும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் ஜூலை 23-ம் தேதி முதல் விமான நிலைய கடப்பு விசா (Airport Transit Visa - ATV) பெற தேவையில்லை," என்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஸீல்கெர் அறிவித்துள்ளார்.
Advertisement
/body>