முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் சிக்கல்

by Rajkumar, Aug 5, 2018, 13:40 PM IST

இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா 11-ம் தேதி என்று முடிவு செய்து அழைப்பும் விடுக்கப்பட்டது. ஆனால் சிறிய கட்சிகளின் நிபந்தனைகளால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே எதிர்கட்சிகள் இணைந்து அரசு அமைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன. 

பெனாசீர் பூட்டோ மகன் பிலாவலின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் அல் அமல் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்திருக்கின்றன. பாகிஸ்தான் பொதுதேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி 117 இடங்களில் வெற்றி பெற்றது. 

அங்கு ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க இம்ரான் கான் கட்சி முடிவு செய்திருந்தது. ஆனால் எதிர்கட்சிகளுடன் சிறிய கட்சிகள் கைகோர்க்க தொடங்கியுள்ளதை அடுத்து இம்ரான் கான் பதவியேற்புகான அழைப்பை பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் கட்சி திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.

You'r reading முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் சிக்கல் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை