அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் இந்தியர் ஒருவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை தவறாக சித்திரிக்கும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த வழக்கில் அமெரிக்க உள்ளூர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் அபிஜித் தாஸ் (வயது 28). இந்தியரான இவர், கடந்த ஆண்டு மே மாதம் முதல் செப்டம்பர் வரை வெவ்வேறு பெயர்களின் பெண் குழந்தைகளை தவறாக சித்திரிக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. 1000 புகைப்படங்களையும் 380 ஒளிப்பதிவுகளையும் அவர் சட்டத்திற்கு விரோதமாக வைத்திருந்தது தெரிய வந்தது.
குழந்தைகள் பாலியல் புகைப்படங்களை வைத்திருந்தது மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றங்கள் அடிப்படையில் நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதன்படி, அபிஜித் தாஸூக்கு 52 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைவாசத்திற்குப் பின்னரும் அவர் 10 ஆண்டுகள் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.